Posts

Showing posts from September, 2017

வேண்டாமே விமர்சனம்

Image
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார். மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா?  அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” என சொல்லி விட்டு சென்றார். மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத...

பணிவு தந்த பலன்

Image
கிருபாச்சாரியாரின் குருகுலத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் பந்து விளையாடி கொண்டிருந்தனர். பந்து ஒரு கிணற்றுக்குள் விழுந்தது. அப்போது அழுக்குத்துணி உடுத்தி மீசை, தாடியுடன் வந்த துரோணர், ''கிணற்றை சுற்றி ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார். அவரது தோற்றம் துரியோதனனுக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியது. ''நான் எதற்கு நின்றால் என்ன?'' என்றான் அவன். ஆனால் அர்ஜுனன், ''சுவாமி... கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க வழி தெரியாமல் தவிக்கிறோம்'' என்றான் பணிவுடன். துரோணர் ஆர்வத்துடன் ''தம்பி உன் பெயர் என்ன?'' என்றார். ''என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தில் படிக்கிறேன்'' என்றான். ''நல்லது... நீருக்குள் விழுந்த பொருளை எடுக்கும் மந்திர வித்தையை இப்போதே உனக்கு கற்று தருகிறேன்'' என்று சொல்லி அங்கிருந்த புற்களை பறித்தார். அர்ஜுனன் காதில் மந்திரத்தை உபதேசம் செய்து புற்களை அவனிடம் கொடுத்து, ''அர்ஜுனா! மந்திரத்தை ஜெபித்தபடி ஒவ்வொரு புல்லாக கிணற்றுக்குள் வீசு'' என்றார். ...

நீதிக்கு தலை வணங்கு

Image
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் புறப்பட்டார். கீரந்தன் என்னும் அந்தணர் வீட்டில் பேசும் குரல் கேட்டது. அவர் தன் மனைவியிடம், '' நாளை காசி யாத்திரை செல்கிறேன். திரும்பி வர நாளாகும். நம் மன்னரின் நல்லாட்சியில் வாழும் நமக்கு குறையேதுமில்லை'' என்றார். இதை கேட்ட மன்னர் அந்தணர் வீட்டை கண்காணித்து வந்தார். ஒரு நாள் நகர்வலம் வந்தபோது அந்த வீட்டில் ஏதோ ஆண்குரல் ஒலிப்பது கேட்டு கதவை தட்டினார். கீரந்தன் காசியிலிருந்து ஊர் திரும்பியிருந்ததை அவர் அறியவில்லை. ''ராத்திரியில் கதவைத் தட்டுபவன் யார்?'' என்று உள்ளே இருந்த கீரந்தன் கேட்டார்.  சுதாரித்த மன்னர், சந்தேகம் வராத விதத்தில் எல்லா வீட்டுக்கதவையும் தட்டி விட்டு ஓடினார்.  திருடன் வந்ததாக கருதிய அப்பகுதி அந்தணர்கள், மன்னரிடம் முறையிட்டனர். குற்றவாளி பிடிபட்டால் என்ன தண்டனை தரலாம்?'' என மன்னர் கேட்க ''கையை வெட்டலாம்'' என்றனர். ''அப்படியா... கதவைத் தட்டியது நான் தான்'' என்ற மன்னர், யாரும் எதிர்பாராத விதத்தில் வாளால் தன் கையை...

தேடி வந்த லட்சுமி

Image
மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகை செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார். மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. போதாக்குறைக்கு விஷ்ணுவுக்கு நைவேத்யம் செய்த பாலையே, உணவாக ஏற்பார் மகரிஷி. இதனால் லட்சுமி, அவரை நேரில் காண ஆஸ்ரமத்திற்கே வந்து விட்டாள். “மகரிஷியே! உம் பக்தியை மெச்சுகிறேன். செல்வ வளமுடன் வாழ்வீராக!” என வாழ்த்தினாள். “தாயே! துறவிக்கு செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தியே என் விருப்பம்” என்றார்.  “முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நீர் செல்வந்தனாக வாழ்ந்தாக வேண்டும். அதன் பின்னரே உமக்கு முக்தி உண்டாகும்” என்று சொல்லி மறைந்தாள். லட்சுமியின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என தீர்மானித்த மகரிஷி ஆஸ்ரமத்தை விட்டு கிளம்பினார்.  ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம், படை வீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. காட்டுக்கு வேட்டையாட வந்த அந்நாட்டின் மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் ரத்தின கிரீடம் பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது. மகரிஷி...

வாணி செய்த அற்புதம்

Image
காசி யாத்திரை சென்ற குமரகுருபரர், கங்கைக்கரையில் மடம் ஒன்று அமைக்க எண்ணினார்.  அப்போது (17 ம் நூற்றாண்டு) மொகாலய மன்னரின் ஆட்சி அங்கிருந்தது. காசி உள்ளிட்ட பகுதியை நவாப் தாரா ஷிக்கோஹ் என்பவர் நிர்வகித்தார். அவரைச் சந்திக்க விரும்பிய குமரகுருபரர், தன் தவசக்தியால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தினார். அதன் மீதேறி புறப்பட்டார். அவரைக் கண்ட நவாப் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்தாலும், ஏதும் பேச முடியவில்லை. காரணம் குமரகுருபரருக்கு இந்தி தெரியாது. இக்கட்டான இந்நிலையில் கலைவாணியை தியானித்து 'சகல கலாவல்லி மாலை' என்னும் பாடல் பாடினார். மனம் குளிர்ந்த தேவியும்,  குமரகுருபரருக்கு இந்தி பேசும் புலமை அளித்து அற்புதம் நிகழ்த்தினாள்.  அதன் பின் நவாப்பிடம், இந்தியில் பேசி மடம் கட்டுவதற்குரிய இடத்தை மானியமாக பெற்றார் குமரகுருபரர். கங்கைக் கரையில் கேதார கட்டத்தில் இம்மடம் உள்ளது.

கிழங்கு விற்ற சரஸ்வதி

Image
சோழன் நடத்திய விருந்தில் கம்பர், அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் பங்கேற்றனர். அம்பிகாபதியும், சோழனின் மகள் அமராவதியும் காதல் கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு பரிமாற அமராவதி உணவுடன் வந்தாள்.அப்போது அம்பிகாபதி, ''இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய....''  என பாடினான்.  அதாவது, ''சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே'' என்றான் அம்பிகாபதி. இது கேட்டு சோழன் கோபம் கொண்டான். கம்பர் சரஸ்வதியை தியானித்தபடி,  ''கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்  தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்'' என பாடலை முடித்தார்.  அப்போது வீதியில், 'கிழங்கோ கிழங்கு'' என்று கூவிய படி பெண் ஒருத்தி சென்றாள். கிழங்கு விற்கும் அவள், சுமையால் பாதம் நோக நடப்பதை பாடல் தெரிவிப்பதாக கருதிய சோழன் சினம் தணிந்தான். அப்பெண் சாட்சாத் சரஸ்வதி தேவி என்பதை உணர்ந்த கம்பருக்கு கண்ணீர் பெருகியது.

கை தட்டு, சித்தி உண்டாகும்

Image
ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ‘‘குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்? ஏகாந்த சித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு என்ன  வழியைக் கையாள வேண்டும்?’’ என்று கேட்டான். அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த குரு, ‘‘இறைவனிடம் பக்தி செலுத்த பல வழிகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழி களில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். மௌனமாக இறைவனை வழிபடுவது ஒரு முறை.  ஆனால், மனம் இறைவனிடம் ஒன்றாமல் சிதறுமானால், அதை அடக்க இன்னொரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் பாடல்களைப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கை தட்டி னால் அம்மரக் கிளைகளில் இருக்கும் பறவைகள் நாலா பக்கங்களிலும் சிறகடித்துப் பறந்து போகும். அதைப்போல இறைவனின் லீலைகளையும் கரு ணையையும் பாடலாக பாடி  நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகளெல்லாம் அகன்றோடிவிடும்.  கைகளால் தாளம் போட்டுக் கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது...

குழந்தை வந்த ராசி..

Image
அந்த வீடே இரண்டாம் முறையாக சந்தோஷத்தால் நிறைந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்து நெஞ்சங்களையும் படபடக்க வைத்தன. இந்த இரண்டாவது குதூகலம் ஆனந்தனால் வந்தது. மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய அவன், வழக்கம் போல பேன்ட்  -சட்டையிலிருந்து விடுபட்டு, லுங்கி சுதந்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, முகம் கழுவி, பூஜையறைக்குச் சென்று, லேசாக நெற்றியில்  விபூதியைத் தீற்றிக்கொண்டு, பத்து விநாடிகள் இறைவனுக்கு தன் தியானத்தை சமர்ப்பித்துவிட்டு ஹாலுக்கு வந்து டெலிவிஷன் முன் இருந்த  நாற்காலியில் அமர்ந்தான்.  அவனுடைய அம்மாவும் அப்பாவும் இங்கிதம் தெரிந்து, வாசலுக்குச் சென்று காற்றாட அமர்ந்துகொண்டார்கள். அவனிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்த விலாசினி, அவனுக்கு டீ தயாரிக்க ஆரம்பித்தாள். படுக்கையறையில், முதல் சந்தோஷத்துக்குக் காரணமான கீர்த்தனா தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு மாதக் குழந்தை.ஆவி பறந்த டீயை ஒரு கோப்பையில் ஏந்தி வந்த விலாசினி, ஆனந்தனிடம்  அதைக் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளுக...

மூலாதாரம்

Image
‘‘அப்போ, நீ முடிவெடுத்துட்டே,  அப்படித்தானே?” அம்மா  அதட்டல் கொஞ்சம், அன்பு கொஞ்சமுமாகக் கேட்டாள். ரகுவிற்கு வியர்த்தது. ”இல்லேம்மா, உங்கிட்டேயும் அப்பா கிட்டேயும் கேட்காம இதுவரை நான் என்ன முடிவெடுத்திருக்கேன்? காலேஜ் நாள்லே இருந்து வேலைக்கு இன்டர்வ்யூ போறவரை உங்க ரெண்டு பேரோட ஆசிகளோடத்தானே வெளியே அடி எடுத்து வைச்சிருக்கேன்....’’ ‘‘சரி காதலிச்சே, ஓகே.  அந்தப் பெண்ணோட பேர் என்ன சொன்னே ? சீதா.....அதுவும் ஓகே. பேர்ப் பொருத்தம் சரி. அது மட்டும் போதுமா? ஜாதகப் பொருத்தம் பாக்க வேண்டாமா?” ‘‘அவங்க வீட்ல இதுலே எல்லாம் நம்பிக்கை இல்லையாம்...” ‘‘ஆனா நமக்கு இருக்கே! அவ நம்ம வீட்லதானே வந்து  வாழணும்? முதல்லே அந்தப் பொண்ணோட ஜாதகத்தை வாங்கிண்டு வா..” ரகு சற்றே தயங்கினான். ‘‘‘ஜாதகம் எங்கிட்டே இருக்கு... நீ கேப்பேன்னு தெரியும்..” ‘‘நல்லவேளை கல்யாணம் பண்ணிண்டு வந்து சொல்லாம முன்னாடியே சொன்னியே” ‘‘எனக்கு ஜாதகத்தைப் பத்தி  எல்லாம்  ஏபிஸிடி  கூடத்தெரியாது. உனக்காகத்தான் வாங்கிண்டு வந்தேன், இந்தா.’’ தன் பௌச்சிலிருந்து  மஞ்சள் தடவிய அந்த ஜாதகத்தை எடுத்துத் தந்...

ஆத்துக்கரை அம்மன்

Image
கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது.  விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந்தக் கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு சென்று நீர்மோர் வார்த்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார் கலியமூர்த்தி. இருபது வயதிருக்கும் போது ஆரம்பித்தது. போனவருடம் வரை எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அது முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கிடந்தார். கையில் காசும் இல்லை. உடம்புக்கும் முடியவில...

தரிசனம் தேடி...

Image
'அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே  உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.' பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, 'இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,' என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி  செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை இரக்கத்துடன் பார்த்து விட்டு, 'பாவம்டா, தாத்தாவை விட்டுட்டு நாம் மட்டும் திருப்பதி போறோம்,'  என்று தங்களுக்குள் பேசியபடி நகர்ந்தார்கள். பரிதாபமாக நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராமானுஜம். அவர் மனைவி வைதேகியும், மகள் மல்லிகாவும் அருகில் வர, தன் ஆதங்கத்தை அவர்களிடம் கொட்டித் தீர்த்தார். 'நான் என்ன நடக்க முடியாமலா இருக்கேன்? பக்கவாதம் வந்ததாலே கொஞ்சம் கைகால் இழுத்துகிச்சி. அதுக்கும் வைத்தியம் பாத்து பிசியோதெரபி செய்து ஓரளவு நடக்கிற அளவு ஆகிட்டேன்.  எனக்கு மட...

எல்லாம் குழந்தை வந்த வேளை

Image
தெற்குப்புற ஜன்னலண்டை வந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி. “என்னம்மா,  கண்ணனைத்தானே எதிர்பார்க்கறே! அவன் என்னிக்குத்தான் பொழுதோட வீட்டுக்கு வந்திருக்கான்? ஆபீஸ், ஆபீஸ், வேலை, வேலை... என்னதான் வெட்டி முறிப்பானோ?” என்று அலுத்துக்கொண்டார் ரிடையராகி வீட்டில் இருக்கும் சங்கரியின் மாமனார். “ஹும்; கல்யாணத்துக்கு முன்னாலேதான் ஆபீஸைக் கட்டிண்டு அழுதான், அப்புறமாவது குடும்பம் பொறுப்புன்னு ஏற்பட்டா காலாகாலத்திலே வீட்டுக்கு வருவான்னு நெனைச்சேன்;  அட, ஒரு குழந்தை பிறந்து மூணு மாசமாறது, அந்தக் குழந்தையைப் பார்க்கணும், கொஞ்சணும் விளையாடணும்னு நினைக்கறானா? தோணலியே அவனுக்கு.” சங்கரிக்கு மட்டுமல்ல தனக்கே ஏற்பட்டிருந்த ஆதங்கத்தை வார்த்தை விசிறியால் ஆற வைக்க முயற்சித்தார் மாமனார். “அதோ அவர் வந்துட்டார்...’’ என்று குதூகலித்த சங்கரி, “ப்ளீஸ், ப்ளீஸ்... வந்ததும் வராததும் அவர்கிட்ட ஒண்ணும் கேட்டுடாதீங்க. அவர், சுள்ளுன்னு விழுவார்” என்று மாமனாரிடம் கெஞ்சினாள். “அவனை எனக்குத் தெரியாதா?  முன்கோபத்திலே முதல் பிரைஸ் அடிக்கறவனாச்சே” என்ற அவர் சங்கரியின் தோளில் சாய்ந்து த...

அம்புலி காட்டி அமுதினை ஊட்டும் அன்னை

Image
வாசல் கதவைத் திறந்த ஜனனி திடுக்கிட்டுப் போனாள். மீனா சித்தி!  இவள் தாயின் தங்கை. எங்கோ மகனுடன் துபாயில் வாழ்ந்து வந்தவள். தொடர்பு விட்டுப் போய் பல நாட்கள் ஆகி விட்டன. இன்று இவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்!  ‘‘சித்தியா, வா வா சித்தி!’’ அன்புடன் ஜனனி அவளை வரவேற்றாள்.‘‘எப்படி இருக்கே ஜானு? உன் கல்யாணத்துக்கு வர முடியல்லை அக்கா பத்திரிகை அனுப்பி லெட்டர் போட்டிருந்தாள்...’’ ‘‘பரவாயில்லை சித்தி இப்பவாவது வந்தியே.’’ ‘‘நான் எத்தனை எத்தனையோ நல்ல நல்ல சந்தர்ப்பங்களை இழந்திருக்கேன்.  அதே போல அக்கா இறந்த போதும் கூட எனக்கு தாமதமாகத்தான் செய்தி தெரிந்தது. அதை விடு. அது பழைய கதை. ’’ ‘‘என்ன சாப்படறே சித்தி?’’ ‘‘ஒண்ணும் வேண்டாம்மா. இப்பத்தான் கல்யாண வீட்டிலே சாப்பிட்டேன்.’’ ‘‘கல்யாண வீடா?’’ ‘‘ஆமாம் என் மருமகள் வீட்டுக் கல்யாணம். என்னை துபாயிலே தனியா விட முடியாதுன்னு என்னையும் கூட்டிண்டு வந்துட்டான், என் மகன்.’’ ‘‘ரொம்ப சந்தோஷம் சித்தி இப்பவாவது உன்னைப் பார்க்க முடிஞ்சுதே.’’ ‘‘உன் கல்யாணத்துக்குத் தான் வர முடியல்லை... இந்தா இதை வாங்கிக்கோ,’’ என்று சொல்லி ஒரு கிஃப்ட் பார்சலைத...

அளவுக்கு அதிகமாக ஆசை வைக்காதே அவதிப்படாதே

Image
ஒருமுறை பூலோகத்துக்கு வந்தார் நாரதர். அருகிலுள்ள ஊரில் சிவாலயம் ஒன்றிருந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் அங்கு செல்ல  முடிவெடுத்தார். கடும் வெயிலடித்தது. வண்டியில் சென்றால் நல்லதே என தன் சக்தியால் ஒரு குதிரை வண்டியை வரவழைத்தார். வண்டியோட்டி வண்டியைக்  கிளப்பினான். சற்று தூரம் சென்றதும், ஒரு மனிதன் வண்டியை நிறுத்தினான். அவன் ஏழை மட்டுமல்ல, முட்டாளும் கூட. ஆன்மிகமெல்லாம் அவனுக்கு  தெரியாது. வண்டியில் இருப்பது நாரதர் என்பதை அவன் அறியமாட்டான். ''ஐயா! வெயில் கடுமையாக இருக்கிறது.  நீர் வண்டியில் தானே போகிறீர்! உமது பாதரட்சையை எனக்கு கொடுத்தால் நடந்து செல்ல சிரமம் இருக்காதே!'' என்றான். நாரதர் அவன்மேல் இரக்கப்பட்டு  பாதரட்சையைக் கொடுத்தார். அவன் அதை அணிந்து கொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதோடு விட்டானா! ''பெரியவரே! நீர் மகா தர்மவான். கேட்டதும்  இந்தக் காலத்தில் யார் கொடுக்கிறார்கள்? சரி சரி...வண்டியில் குடை ஏதாவது இருக்கிறதா! தலை காய்கிறது. தந்தால் சவுகரியமாக இருக்கும்,'' என்றான்.  'அதுவும் நியாயம் தான்' என்றெண்ணிய நாரதர், குடை ஒன்றை ...

செய்யும் தொழிலே தெய்வம்

Image
ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான். இன்னொரு வேலையாளோ 'தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் கடுமையாகப் பாடுபடுவான். முதலாளியை புகழ்ச்சியாக பாராட்டியதில்லை. எதுவும் பேசாமல் அவர் முன் அடக்கத்துடன் நிற்பான்.  சோம்பேறியின் ஏமாற்றுவேலை எத்தனை நாள் பலித்துவிடும்? உண்மையை அறிந்த முதலாளி, ஒருநாள் சோம்பேறியை தோட்டவேலையில் இருந்து வெளியேற்றினார். நல்லவனை பாராட்டியதோடு, அவனுக்கு சன்மானமாகப் பெரும்பொருள் கொடுத்து மகிழ்ந்தார். பூந்தோட்டம் போன்றது தான் இந்த உலகம். இதற்கு கடவுள் தான் முதலாளி. இங்கே இருவிதமான மனிதர்கள் வாழ்கிறார்கள். ஏமாற்றும் குணம் படைத்து, கடவுளின் புகழ்பாடி ப...

பூரவ ஜன்மன்த்து பந்தம்

Image
மோகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். நடுத்தர வர்க்கத்தினன். நாணயமானவன். ஒரு சராசரி குடும்பத்தின் அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொண்டவன். ஆனால், அவனுக்கு ஒரு குறை. அது ஒரு குழந்தை இல்லாததுதான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவன் நாற்பதை எட்டிவிட்டான்; மனைவிக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் குழந்தை பிறக்குமா என்பதில் இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மருத்துவப் பரிசோதனைகள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டன. ஆனாலும், கரு உருவாகாததற்கு என்ன காரணம் என்று இருவருக்குமே புரியவில்லை.  இயல்பான தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகும், உடலில் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவம் சொன்ன பிறகும், கர்ப்பம் தரிக்காததன் வேதனை இருவர் மனதிலும் ஏகமாகப் படிந்திருந்தது. பரிசோதித்த முறை தவறாயிருக்குமோ என்ற சந்தேகத்தில் மேலும் இரு மருத்துவக் கூடங்களில் பரிசோதனை மேற்கொண்ட மோகன், அந்த இடங்களிலிருந்தும் அதே முடிவுகள் வரவே மிகவும் சோர்ந்துபோனான். நண்பன் ஒருவன் ஒரு யோசனை சொன்னான்: ‘‘மோகன், உன்னுடைய வருத்தம் நியாயமானதுதான். குறையென்...

ஏன் இப்படி, என்ன காரணம்?

Image
ஜோதிடர் தாண்டவனுக்கு ஏகப்பட்ட வருத்தம். தாமும் எவ்வளவோ துல்லியமாகக் கணித்துதான் ஜோதிடம் சொல்கிறோம்; ஆனாலும் தனக்கு மட்டும் ஏன் அதிக எண்ணிக்கையில் ஜாதகர்கள் வருவதில்லை என்று அவருக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக ஆர்வத்துடனும்தான் அவர் ஜோதிடம் கணித்துச் சொல்கிறார். கேட்கிறவர்கள் தங்களுடைய பழைய கால சம்பவங்களை அவர் விவரித்துச் சொல்லும்போது மிகுந்த அதிசயத்துடன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். ‘அதெப்படி இத்தனை தெளிவாக, கூட இருந்துப் பார்த்ததுபோலவே சொல்கிறீர்கள்?’ என்று ஆச்சரியத்துடன் வினவியிருக்கிறார்கள்.  ‘எல்லாம் உங்கள் ஜாதகம் சொல்றதுதான். இதுதான் அழகான கண்ணாடிபோல உங்க வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே காட்டுதே. அதை நான் சரியாகப் படிச்சுச் சொல்றேன், அவ்ளோதான்,’ என்று அடக்கமாக பதில் சொல்வார். இப்படி அடக்கமாகவும், பணிவாகவும் தான் இந்தத் தொழிலைப் பார்ப்பது சரியில்லையோ! பந்தா காட்ட வேண்டுமோ! ஜாதகத்தைப் பார்த்தவுடன் தன் மனசுக்குத் தெளிவாகப் பட்டதை உடனே சொல்லக்கூடாதோ! நீட்டி முழக்கி, அதிக நேரம் எடுத்துக்கொண்டு, எதிரில் உட்கார்ந்திருக்கும் ஜாதகரின் கண...